#IPL2021: மூன்றாம் போட்டியில் ஹைதராபாத் – கொல்கத்தா மோதல்.. வெற்றிபெறப்போவது யார்?

Sunrisers Hyderabad will take on Kolkata Knight Riders in the third match of the IPL series today, which going to start in Chennai.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள மூன்றாம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.

14-ம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த இரண்டாம் போட்டியில் டெல்லி அணி அதிரடியாக வெற்றிபெற்றது. அதனைதொடர்ந்து இன்று நடைபெறவுள்ள மூன்றாம் போட்டியில்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 முறையம், மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி என்பதால், இதில் வெற்றிபெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே தீவிரமடைந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் XI:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர் / கேதார் ஜாதவ், முகமது நபி, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், ஷாகிப் அல் ஹசன் / சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.