#IPL2020: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு !

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 41-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இப்போட்டி  அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில்  நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின்  கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம் :

சுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன் , பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், நாகர்கோட்டி , பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ்  அணி வீரர்கள் விவரம் :

ரகானே, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹெட்மியர், அன்ரிச் நோர்ட்ஜெ , மார்கஸ் ஸ்டோயினிஸ்,அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின்,தேஷ்பாண்டே, ரபாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்று  14 புள்ளிகளுடன்  2-ஆம் இடத்தில் உள்ளது.கொல்கத்தா அணி 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்று 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.