தனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைத்து விட்டதாகவும் உங்கள் குரல்கள் கேட்கப்பட்டு விட்டது எனவும் சுரேஷ் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சிவானி அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நேற்று வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஷிவானி தற்பொழுது தான் வெளியேற்றப்பட்டார், அனிதா இன்று வந்து விட்டார்.
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கேட்கும்பொழுது போட்டியாளர்களில் அழைக்கப்படாதது நான் ஒருவன் மட்டும்தான் என வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டுள்ளார். எனவே, இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உங்கள் குரல் கேட்கப்பட்டுவிட்டது என பதிவு ஒன்றை வெளியிரோடுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த பதிவு,
unknown node