இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeThalapathy 67
தளபதி 67 படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், முன்னதாக சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஅதனை தொடர்ந்து தற்போது பிரபல மலையாள இளம் நடிகரான மேத்யூதாமஸ் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeMathew Thomas 67 [Image Source: Twitter ]
தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து பேசிய மேத்யூதாமஸ் ” லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சார் படத்தில் நடித்ததால், தமிழில் சிறந்த அறிமுகம் கேட்டிருக்க முடியாது” என பேசியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.