கொரோனா முடிந்தவுடன் திருமணம் நடத்திடலாம் – விக்னேஷ் சிவன்.

Director Vignesh Sivan has responded to a question about marriage on Instagram.

திருமணம் குறித்த கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். கடந்த 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே.  இருவரும் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்த விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு “திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் சகோதரர். பணம் கொஞ்சம் சேர்த்துவிட்டுத்தான் திருமணம் செய்வோம். கொரோனா முடிந்தவுடன் திருமணம் நடத்திடலாம்” என்று கூறியுள்ளார்.