அந்தகன் படத்தின் படப்பிடிப்பின் போது பிரசாந்துடன் கிரிக்கெட் விளையாடும் யோகி பாபுவின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கேஎஸ் ரவிகுமார், பலர் நடிக்கின்றார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் பிரசாந்த் மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node