தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழையும் தாண்டி இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில், 39 வயதாகும் சர்வானந்த் தற்போது தனது நீண்ட ஆண்டுகால காதலியான ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சியதார்தம் முடிந்த நிலையில், தற்போது திருமணம் முடிந்துள்ளது.
unknown nodeஇவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் பெற்றோர்களின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு ராம் சரண் மற்றும் சில நடிகர்கள் நேரில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
unknown nodeதிருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown node