ஆஹா..தமன்னாவுக்கு கிப்ட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.!! என்ன கிப்ட் தெரியுமா.?

நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ்

tamanna and rajinikanth

நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததாக படத்தின் தாயுரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் கேக் வெட்டும் புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நடிகை தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி காந்த உடன் நடித்தது குறித்தும், அவர் தனக்கு கிப்ட் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” ரஜினி சாருடன் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய கனவு. அந்த கனவுக்கு “ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நிறைவேறிவிட்டது. ரஜினிகாந்த் சார் ஆன்மீகப் பயணத்திற்கான புத்தகத்தை  எனக்கு பரிசளித்தார்” என கூறியுள்ளார்.