இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் யாருடன்...?

It has been reported that director AR Murugadoss is planning to direct the next film with Telugu actors and is writing the story for it.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பைப்பெற்றது. ஆனால் வசூல் வகையில் மிக பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கதிட்டமிட்டிருந்தார். ஆனால்,  சில காரணங்களால் எடுக்கமுடியவில்லை. இந்த நிலையில் அன்மையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சிபிசர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கப்போகிறார் என்பதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.