துருவநட்சத்திரம் திரைப்படம் என்னாச்சு..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் "துருவநட்சத்திரம்". இந்த திரைப்படத்தில்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் “துருவநட்சத்திரம்”. இந்த திரைப்படத்தில் ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி , ரித்து வர்மா , பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

unknown node

DhruvaNatchathiram [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்கள் படப்பிடிப்பு அப்டியே நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து படம் என்னதான் ஆச்சு என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், அதற்கான சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

unknown node

DhruvaNatchathiram [Image Source: Twitter ]

அது என்னவென்றால், துருவநட்சத்திரம் நிலுவையில் உள்ள பேட்ச் ஒர்க் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் முடிவடைந்தது என்றும் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் விரைவில் தொடங்கும் எனவும் தக்வல்கள் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

DhruvaNatchathiram [Image Source: Twitter ]

மேலும் நடிகர் விக்ரம் தற்பொழுது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருவநட்சத்திரம் திரைப்படம் என்னாச்சு..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!