வெவ்வேறு கனவுகளுடன் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது....?

A video of Kamal talking about how the mood of the contestants is currently has been released in the first promo.

போட்டியாளர்களின் மனநிலை தற்பொழுது எப்படி இருக்கும் என கமல் பேசுவது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும்   நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்களில் பைனல் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் வெற்றியாளர் யார் என்பது தெரியவர உள்ளது. இந்நிலையில் இன்றைய முதல் புரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் கமல் சார் வெவ்வேறு கனவுகளுடன் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில், ஐவர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.

போட்டியின் முடிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என பேசுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node