அதென்ன பார்ட் 2.? வேறு தலைப்பே கிடைக்கலையா.? கடுப்பான 'ஒரே ஹீரோ' ராமராஜன்.!

1990 காலகட்டத்தில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு "மேதை" படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள்

1990 காலகட்டத்தில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

unknown node

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

இதையும் படியுங்களேன்-என் டி-ஷர்ட் கழட்டுனதும் என் மானம் போச்சு.! ஷகீலாவை வருத்தப்பட வைத்த அந்த நடிகை.!

unknown node

மீண்டும் நடிகர் ராமாராஜன் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையில், ஒரு படத்தின் 2-ம் பாகம் எடுக்கும்போது அதற்கென தனியாக தலைப்பு வைக்க வேண்டும் என நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.

unknown node

இது தொடர்பாக பேசிய அவர் “முதல் குழந்தை பிறக்கும்போது நாள் நட்சத்திரம் பார்த்து கண்ணன் என பெயர் வைத்து விட்டு, 2-வது குழந்தைக்கு கண்ணன்-2 என யாராவது பெயர் வைப்பார்களா? அதென்ன 2? எத்தனையோ தலைப்புகள் உள்ளது. அதை விட்டுவிட்டு இப்படி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதைபோல  ஒரு பேட்டியில் இதுவரை 44 படங்களில் நான் தனி ஹீரோவாக நடித்துள்ளேன். வேறு யாரும் அப்படி நடித்தது இல்லை. 50 படம் வரை இப்படித்தான் நடிப்பேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.