பிரியங்கா சோப்ரா :பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தன்னை பற்றிய விவரங்களையும், தான் நடிக்கும் படங்கள் பற்றியும் அடிக்கடி அவர் பதிவிடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை காயம் அடைந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
கழுத்து பகுதியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவே வெளியிட்டுள்ளார். ‘The Bluff’ திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உங்களுக்கு என்னாச்சு? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
unknown nodePriyanka Chopra / @Priyanka Chopra
மேலும், சிலர் பாதுகாப்புடன் படத்தில் நடிங்கள் எனவும் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். 19 -ஆம் நூற்றாண்டில் கரீபியன் பகுதியில் நடைபெறும் கதையை வைத்து இந்த The Bluff படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா கடற்கொள்ளையர் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரூசோ பிரதர்ஸின் பேனர் ஏஜிபிஓ ஸ்டுடியோஸ் மற்றும் அமேசானின் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
பிரியங்கா சோப்ரா இந்த படத்தை தவிர ஹாலிவுட் படமான ஹெட் ஆஃப் ஸ்டேட்டிலும் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார்களான இட்ரிஸ் எல்பா மற்றும் ஜான் செனா ஆகியோர் மாநிலத் தலைவராக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
