என்ன சொல்லுறது.? எப்படி சொல்லுறது...ரஜினி சார்.? நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட மாதவன்.!

நடிகர் மாதவன் ”ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்

நடிகர் மாதவன் ”ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

unknown node

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

unknown node

இந்த நிலையில், இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் படத்தை பார்க்கவேண்டும் என்றும் , இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன் எனவும் ட்வீட்டரில் பாராட்டி இருந்தார்.

unknown node

இதனையடுத்து, ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாதவன் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில், ” நான் என்ன சொல்லுவது, எப்படி சொல்லுறது.. என்று எனக்கு தெரியவில்லை. நன்றி ரஜினி சார்” என தெரிவித்துள்ளார்.

unknown node