என்னது..? ஏலியன் பொம்மையாக மட்டும் இத்தனை கோடி செலவா..? மிரள வைக்கும் அயலான்.!!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை

Ayalaan film

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை  ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

unknown node

AyalaanFromDiwali2023 [Image Source : Twitter /@Siva_Kartikeyan ]

எலியன் உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

unknown node

Ayalaan [Image Source : Twitter /@Siva_Kartikeyan ]

இந்த நிலையில், தற்போது அயலான் படத்தில் 4,500 கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும், படத்தில் ஏலியன் பொம்மைக்காக மட்டுமே ரூபாய் .2 கோடி செலவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

unknown node

Ayalaan movie [Image Source : Twitter /@CinemaWithAB]

இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஏலியன் பொம்மையாக மட்டும் இத்தனை கோடி செலவா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அயலான் படம் அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னது..? ஏலியன் பொம்மையாக மட்டும் இத்தனை கோடி செலவா..? மிரள வைக்கும் அயலான்.!!