என்ன மனுஷன்யா…சைலண்டாக பெரிய உதவிகள் செய்யும் “டி.இமான்”.! குவியும் பாராட்டுக்கள்.!

Default Image

இசையமைப்பாளர் டி .இமான் சமீபகாலாமாக யாருக்கும் தெரியாமல்  பல உதவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் பிரபு எனும் நடிகர் ஒருவர் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இவர் சென்னை கோயம்பேட்டில் கேட்பார் அற்ற நிலையில் கிடைந்துள்ளாராம்.

D Imman
D Imman [Image Source : Twitter]

அவரை மருத்துவமனையில், சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்க கூறி எவ்வளவு செலவு வேண்டுமானாலும் தான் கொடுக்கிறேன் என்று டி.இமான் உறுதி கூறியுள்ளாராம். பிரபுவிற்கு வாயில் புற்றுநோய்  4-வது நிலையில் இருக்கிறதாம். எனவே மருத்துமனைக்கு நேரிலே சென்று பிரபுவிற்கு சிகிச்சை அளிக்க இசையமைப்பாளர்  டி.இமான் கூறியுள்ளாராம்.

D. Imman
D. Imman [Image Source : Twitter]

அதைபோல், ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுன் ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இவருக்கு 2 பசங்கள் இருக்கிறார்கள். அவருடைய மனைவிக்கும் வருமானம் இல்லை எனவே சற்று வறுமையில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுக்கும் சில உதவிகளை செய்துள்ளாராம்.

D. Imman Educational Trust
D. Imman Educational Trust [Image Source : Twitter]

இட்லி  மாவு விற்பனை செய்வதற்காக பவுன் ராஜ் குடும்பத்திற்கு க்ரேண்டர், சில பாத்திரங்கள் என பல பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளாராம். எனவே இதுவே ஒரு அறக்கட்டளை வாயிலாக செய்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக  “D. Imman Educational Trust” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளாராம். இப்படி தெரியாமல் பல உதவிகளை செய்து வரும் டி.இமானை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO