ஷாருக்கான் நடிப்பில் வெளியான ’பதான்’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்ததிரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
unknown nodePathan Box Office[Image Source : Twitter]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 8,000 திரையரங்குகளில் வெளியானது.
unknown nodePathan Box Office [Image Source : Twitter]
படம் சமீபத்தில் தான் 1,000 கோடி வசூலை கடந்தது. இந்த நிலையில், 1,000 கோடி வசூலை கடந்ததை கொண்டாடும் விதத்தில் படத்தின் டிக்கெட் விலை இன்று 1 நாள் மட்டும் ரூ.110 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த விலையில் தான் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
unknown nodeஇந்த அசத்தலான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.