உங்க குழந்தை படத்தில் நடிக்கணுமா? உடனே இதை மட்டும் பண்ணுங்க!!
Acting Opportunity : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் சீதக்காதி,ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களையும், இயக்கி இருக்கிறார். இவர், இயக்கி உள்ள எல்லா படங்களுமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் எல்லா படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி தரணீதரன் அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் தான் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆன் குழந்தைக்கு 8 லிருந்து 10 வயது இருந்தால் தேவை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் ” பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் தமிழ்ப் படத்துக்கு குழந்தை தேவை.8-10 வயதுள்ள குழந்தையாக இருக்கவேண்டும். டஸ்கி ஸ்கின் டோன் / டார்க் ஸ்கின் டோன் சட்டகம் – இயல்பான / ஒல்லியாக இருக்கவேண்டும். மொழி – தமிழில் சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள அனைவரும் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உங்கள் முந்தைய பணி விவரங்கள் ஏதேனும் இருந்தால், கீழே உள்ள மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பவும். மின்னஞ்சல் ஐடி: [email protected] உற்சாகத்திற்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி” என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளை படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுஙங்கள்.