முதன் முதலாக ரிலீஸுக்கு முன்பு நிம்மதியா தூங்கப் போறேன்! விஸ்ணு விஷால் எமோஷனல்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லால் சலாம்.

LalSalaam trailer launch

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லால் சலாம்.  இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அதில் கலந்துகொண்டு பேசிய விஸ்ணு விஷால் சற்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

மிரட்டும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ட்ரைலர்.!

விழாவில் பேசிய விஸ்ணு விஷால் “என் வாழ்க்கையில் முதல்முறையாக, ரிலீஸுக்கு முன் நான் மகிழ்ச்சியாக தூங்கப் போகிறேன். ஏனென்றால், ஓப்பனிங் கிடைக்குமா என்று நானும் விக்ராந்தும் எப்போதும் பேசிக்கொண்டு இருப்போம். ஆனால் இப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் சார் இருக்கிறார். எனவே, அதனை பற்றி  நான் கவலைப்படவில்லை.

லால்சலாம் எனது 15 வருட பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. கண்டிப்பாக படம் பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன். அனைவரும் படத்தை திரையரங்கிற்கு வந்து பாருங்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவரும் நான் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ”  என்றும் விஸ்ணு விஷால் கூறியுள்ளார்.