விஷாலின் வீரமே வாகை சூடும் மாஸ் அப்டேட்.! டிசம்பர் ரிலீஸ்.!

விஷால் நடித்து வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.

விஷால் நடித்து வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அடுத்ததாக தற்போது படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டு படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலின் வீரமே வாகை சூடும் மாஸ் அப்டேட்.! டிசம்பர் ரிலீஸ்.!