பிளாக்பஸ்டர் வெற்றிக்கு தயாரான விஷால்.! அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா..?

தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து விஷால் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே

தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து விஷால் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

unknown node

Hari vishal [Image Source : Google ]

இதனை தொடர்ந்து, தற்போது அந்த படத்தை பற்றிய புதிய தகவல் என்னவென்றால், விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் அந்த  திரைப்படத்தை பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

unknown node

vishal And Hari [Image Source : Google ]

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை. அதுபோல் அதற்கு முன்பும் விஷால் நடிப்பில் வெளியான படங்களும்  பெரிதளவு பேசப்படவில்லை.

unknown node

MarkAntony [Image Source: Twitter]

எனவே ஆரம்ப காலகட்டத்தை போல மீண்டும் ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுவேண்டும் என்ற நோக்கில் விஷால் இருக்கிறார்.இதன் காரணமாக தான் அவர் இயக்குனர் ஹரியிடம் ஒரு கதை கேட்டு சம்மதம் தெரிவித்துள்ளாராம். மேலும் விஷால் தற்போது மார்க்ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஷால்- ஹரி கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.