சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில் இது சூர்யா 40 படத்திற்கான புகைப்படமா என்பது உறுதியாக தெரியவில்லை.
unknown node