துக்ளக் தர்பார் ட்ரெய்லர் வரும் 31- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் ராசிக்கன்னா, அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஓடிடியில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வரும் 31- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரெய்லர் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown node