கொடூர லுக்கில் விஜய்...நாளை வெளியாகிறது 'தளபதி 67' டைட்டில்.!

தளபதி -67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி –67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்காலிமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

Thalapathy67 [Image Source : Twitter]

படத்தில்  த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ்உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

Thalapathy67 Update [Image Source : Twitter]

இதற்கிடையில்,  7 ஸ்க்ரீன் நிறுவனம் வரிசையாக படத்தின் அப்டேட்டை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், கடைசியாக படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், தொலைகாட்சி உரிமையை சன் தொலைகாட்சி நிறுவனம் வாங்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

Thalapathy 67 New Update Lokesh [Image Source : Twitter ]

அதனை தொடர்ந்து படத்திற்கான தலைப்பு நாளை வெளியிடபடும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை அறிவித்துள்ளனர். போஸ்டரில் விஜய் ரத்த கரையுடன் கொடூர லுக்கில் இருக்கிறார். எனவே படம் தரமான கேங்ஸ்டார் படமாக இருக்கும் என தெரிகிறது.

unknown node
கொடூர லுக்கில் விஜய்...நாளை வெளியாகிறது 'தளபதி 67' டைட்டில்.!