பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணிகள்...விரைவில் விடுதலைக்கு 'விடுதலை'.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் "விடுதலை". இந்த

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த திரைப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

unknown node

Viduthalai Part-1 Dubbing Starts TODAY [Image Source : Twitter]

படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது.

unknown node

Viduthalai Part-1 Dubbing Starts TODAY [Image Source : Twitter]

தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்திற்கான டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதி,  வெற்றிமாறன் என படக்குழுவினர் பலர்  கலந்து கொண்டார்கள். படத்திற்கான டப்பிங்கை பேசியும் வருகிறார்கள்.

unknown node

Viduthalai Part-1 Dubbing Starts TODAY [Image Source : Twitter]

பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே விரைவில் விடுதலை படத்திற்கு விடுதலை கொடுக்கப்பட்டுவிடும். ஏனென்றால், 2 ஆண்டுகளாக படத்தை எடுத்து வருகிறார்கள். எனவே படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

unknown node