வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுதலை
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
unknown nodeSoori Viduthalai [Image Source: Twitter ]
விடுதலை படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த மாதம் முடிந்து படத்திற்கான டப்பிங் பணிகள் விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை முதல் பாடல்
unknown nodeviduthalai music by ilayaraja [Image Source : Twitter]
விடுதலை படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகியுள்ள அந்த பாடலை நடிகர் தனுஷ் படியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன் முதலாக இளையராஜா இசையில் பாடிய தனுஷ்
unknown nodeIlayaraja MusicalSung by Dhanush [Image Source : Twitter]
நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர் என கலக்கி வரும் தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனாலும் கூட அவர் இளையராஜா இசையில் ஒரு பாடல் கூட பாடவில்லை. எனவே விடுதலை படத்தில் அவர் முதன் முதலாக பாடலை பாடியுள்ளதாக பரவும் தகவல் ரசிகர்கள் உற்சாகத்துடன் அந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்துள்ளனர்.