பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கையில் மொபைல் போன் வைத்திருக்கும் இளம் ரசிகருடன் நடிகர் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். சரியான செல்ஃபியை க்ளிக் செய்யவில்லை.
unknown nodeஎனவே ஒரு இரண்டு முறை ரசிகர் முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் செல்ஃபி எடுக்கமுடியவில்லை. இதனால் கோபமடைந்த ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் போனை தூக்கி எறிந்தார். பிறகு அந்த ரசிகர் நடிகரிடம் கெஞ்சுவதைக் கேட்கலாம்.
unknown nodeஆனால் ரன்பீர் கபூர் கண்டுகொள்ளாமல் விலகி செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் “ரன்பீர் கபூர் செய்த தவறு மிகவும் வருத்தமாக உள்ளது” என்றும்நண்பர்களே,ரன்பீர்கபூர்மிகச் சிறந்த நடிகர், நான் அவருடைய தீவிர ரசிகன், ஆனால் இந்த விவகாரம் எனக்கு வேதனை அளிக்கிறது எனவும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeangryranbirkapoor [Image Source : Twitter]
மேலும் சில நெட்டிசன்கள் டிவிட்டரில் ரன்பீர் கபூர் செய்தது தவறு#angryranbirkapoorஎன்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.