இய்குனார் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
unknown nodeVaathiOn17Feb [Image Source: Google ]
படத்தில் சம்யுக்த்தா,தனிகெள பரணி, சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeVaathi [Image Source : Google ]
இந்த நிலையில், தற்போது படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodevaathi dhanush [Image Source : Twitter]
தமிழகத்தில் மட்டும் படம் 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த படமும் தனுஷிற்கு பெரிய ஹிட் படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.