தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் , வசூலையும் பெற்று வருகிறது. படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 44 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் 50 கோடி வசூலை கடக்கவுள்ளது.
unknown nodeDhanush’s dream house [Image Source : Google ]
இதற்கிடையில், வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனுஷ் தனது பெற்றோருக்காக பிரமாண்ட வீட்டை பரிசாக அளித்துள்ளார். புதுவீட்டில் தனுஷ் தனது தந்தை கஸ்துரி ராஜா, தாய் விஜய லட்சுமி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeDhanush’s dream house [Image Source : Google ]
தனுஷ் தனது பெற்றோருக்கு பரிசளித்த இந்த வீடு சென்னை போயஸ் கார்டனில் இருக்கிறது. மேலும், கிட்டத்தட்ட இந்த வீட்டின் மொத்த விலை 150 கோடிகள் இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
unknown nodeDhanush’s dream house [Image Source : Google ]
மேலும், நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.