நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeVarisuPongal [Image Source: Twitter ]
இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலுக்கான புதிய அப்டேட் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, #SoulOfVarisuஎன்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் அம்மா செண்டிமெண்ட் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.
unknown nodeஇந்த பாடலை, விவேக் எழுத பாடலை சித்ரா தேவி பாடியுள்ளார். ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நாளை மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
unknown nodeVarisu Audio Launch [Image Source: Twitter]
மேலும் வாரிசு திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.