இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “வாரிசு”. தில்ராஜ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் ராஷ்மிகா, எஸ்.ஜே.சூர்யா, குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ் என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeVarisu Movie Vijay [Image Source: Twitter ]
குடும்ப சென்டிமென்ட் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. படத்தை அவருடைய ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படம் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை குறித்து பற்றி பார்க்கலாம்.
unknown nodeபடத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” இந்த பொங்கல் எங்களோடது” என பதிவிட்டுள்ளார். மற்றோருவர் ” ஒற்றை வரிக் கதையை மூன்று மணி நேர படமாக கொடுத்து ரசிகர்களை சோதிக்கச் செய்துள்ளது வாரிசு திரைப்படம்.. பழைய தெலுங்கு படங்களின் ரூட்டிலேயே. என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” வாரிசு படத்தில் தளபதி விஜய் செய்த அனைத்து மேம்பாடுகளும் சிறப்பாக செயல்பட்டன, என்ன ஒரு பெர்ஃபார்மர் அவர் சுயமரியாதை நகைச்சுவை ஒரு பெரிய பிளாக்பஸ்டராக இருக்கும் ” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” உங்கள் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை & குடும்பம் முழுவதையும் வாரிசுக்கு அழைத்துச் செல்லுங்கள் இந்தப் படம் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இது குடும்பத்துக்கானது, இந்த படம் எங்கள் குடும்பத்தை கொண்டாடுவதற்காகவே இந்த படம் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை அழகான திரைக்கதையில் நமக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் வம்ஷி” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node