வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு...அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

unknown node

Varisu[Image Source: Twitter]

படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

VarisuPongal [Image Source: Twitter ]

இந்த நிலையில், தற்போது அதற்கான, அறிவிப்பை படக்குழு வெளியீட்டுள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படத்திற்கான ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்களேன்-பீச்சில் குளு குளு கவர்ச்சி…அரைகுறை ஆடையில் ரகுல்…வைரலாகும் புகைப்படங்கள்.!

unknown node

Varisu Trailer [Image Source: Twitter ]

நாளை ட்ரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ‘வாரிசு’ திரைப்படம் சென்சாரில் U சான்றிதழை பெற்றுள்ளது. எனவே படத்தை குழந்தைகளுடன் குடும்பங்களாக சென்று பார்க்கலாம். படத்தின் ரன் டைம் மொத்தமாக 2.49 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு...அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!