வாரிசு பிளாக்பஸ்டர்...மீண்டும் வம்சியுடன் இணையும் தளபதி விஜய்.!?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடைய  இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடைய  இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

வாரிசு

unknown node

Varisu [Image Source: Twitter ]

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் வம்சி இயக்கத்தில் விஜய்

unknown node

vamsi varisu [Image Source : Google]

வாரிசு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் மீண்டும் வம்சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து விஜயின் 69-வது திரைப்படத்தை தான் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 68 அப்போ..?

unknown node

Vijay and Atlee [Image Source: Twitter ]

விஜயின் 69-வது படத்தை வம்சி இயக்கவுள்ளார் எனவே, 68-வது படத்தை விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படம் வெளியான பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.