வெண்ணிலா கபடி குழு பிரபலம் திடீர் மரணம்.! திரையுலகினர் அதிர்ச்சி.!

Default Image

வெண்ணிலா கபடி குழு பட பிரபலம் ஹரி வைரவன் நடிகர் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்.

தமிழில் குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். நீண்ட நாள்களாக இவர் உடல் சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, அவருடைய மனைவி ஊடகங்கள் வாயிலாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தனது கணவன் கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் மருத்துவ செலவுக்காக உதவி வேண்டும் என்று கேட்டிருந்தார். இதனை அறிந்த சக நடிகர்களான பிளாக் பாண்டி, கார்த்திக், சரவணா ஆகியோர் ஹரி வைரவனுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்தனர்.

இதனையடுத்து, மருத்துவர்கள்  ஹரி வைரவன்னுக்கு  சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை 12.15 மணி அளவில் ஹரி வைரவன் காலமானார். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், இவரது உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், கடச்சனேந்தலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்