10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வலிமை மோஷன் போஸ்டர்.!

வலிமை மோஷன் போஸ்டர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது

வலிமை மோஷன் போஸ்டர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார்  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியானது . வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது மியூசிக் வகையில் ட்ரெண்டிங் நம்பர் 1-இல் உள்ளது இதனால் அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

unknown node