1 மில்லியன் லைக்குகளை பெற்ற வாத்தி கம்மிங்...!

The goose cumming video song from the master movie has received over 32 million views and 1 million likes on YouTube.

மாஸ்டர் படத்திலிருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 32 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்று 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையை செய்து வருகிறது. மேலும் இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி வாத்தி கம்மிங் வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியீட்டனர்.

unknown node

அந்த பாடல் தற்போது யூடியூபில் 32 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்று 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் {#1MLikesForVaathiComing} என்ற ஹாஸ்டேக்கை ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.