மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியான வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் நேற்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது .
வழக்கமாக திரையரங்குகளில் வெளியான படத்தினை இரண்டு மாதங்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடுவார்கள். ஆனால் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியாகிய 2 வாரங்களிலேயே அமேசான் பிரேமில் வெளியானது. தற்போது வரை மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் படக்குழு கடந்த 27 ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தி கம்மிங் வீடியோ பாடலை வெளியிட்டனர். அந்த பாடல் தற்போது யூடியூபில் 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.