கொண்டாட்டத்திற்கு தயாரா..? அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் மூன்று பெரிய அப்டேட்கள்.!

வருகின்ற பிப்ரவரி மாதம் சிம்பு நடித்து வரும் பத்து தல மற்றும் விஜய் நடித்து வரும் தளபதி 67 தனுஷ் நடித்துள்ள வாத்தி ஆகிய திரைப்படங்களின் அப்டேட்கள்

வருகின்ற பிப்ரவரி மாதம் சிம்பு நடித்து வரும் பத்து தல மற்றும் விஜய் நடித்து வரும் தளபதி 67 தனுஷ் நடித்துள்ள வாத்தி ஆகிய திரைப்படங்களின் அப்டேட்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது.

1.பத்து தல

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் . இந்நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 2ஆம் தேதி பத்து தல முதல் பாடலை வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

2.தளபதி 67

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அப்டேட் பிப்ரவரி 1 ,2 ,3 ,ஆகிய தேதிகளில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முன்னதாக கூறியிருந்தார் .

அதன்படி படத்திற்கான ப்ரோமோ வீடியோ வரும் பிப்ரவரி 3ஆம் தேதி ப்ரோமோ உடன் வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

3.வாத்தி

இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது .இதனை முன்னிட்டு படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4 தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்துவிட்டால் படத்தினுடைய அனைத்து பாடல்களும் அன்றே வெளியிடப்படும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 2,3,4 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று பெரிய ஸ்டார்களுடைய படங்களுக்கான அப்டேட் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.