பிரமாண்டமாக நடைபெற்ற "வாத்தி" பட இயக்குனர் திருமணம்...நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்.!

பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெங்கி அட்லூரி

unknown node

தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது தமிழில், தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வெங்கி அட்லூரி திருமணம்

unknown node

VenkyAtluri’s and Keerthy Suresh

வாத்தி  திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் . இவர்களுடைய திருமணம் இன்று  குடும்பத்தினர் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனுஷும் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்

வெங்கியின் திருமணத்திற்கு, அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ரங் தே’ படத்தில் நடித்த  நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு இயக்குனருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிதின் தனது மனைவி ஷாலினியுடன் தனியாக வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது தனிப்பட்ட ஊழியர்களுடன் திருமணத்திற்கு வந்துள்ளார்.

unknown node

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்துள்ளார். அதில் ”வாழ்த்துக்கள் வெங்கிய்ய்  மற்றும் பூஜா! இந்த புதிய தொடக்கத்திற்காக கடவுள் உங்கள் இருவர் மீதும் அன்பு பொழியட்டும்” என புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.