சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் பாவை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சித்தி இத்னானி. இவர் சிரிக்கும்போது அவருடைய கன்னத்தில் விழும் கன்னக்குழி காகவே பல ரசிகர்கள் உள்ளனர்.
unknown nodeSiddhi Idnani [Image Source: Google]
இவர் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்-தினமும் தனுஷை திட்டுவேன்.. பிறகு நடந்ததே வேற.! ரகசியம் கூறிய சரண்யா.!
unknown nodeSiddhi Idnani [Image Source: Google]
இதற்கிடையில், நடிகை சித்தி இத்னானி நெகிழ வைக்கும் ஒரு செய்யலை செய்துள்ளார். அதன்படி, இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
unknown nodeSiddhi Idnani [Image Source: Google]
மேலும் அவர்களுக்கு தேவையான காலை உணவையும் கொடுத்து அங்கிருந்த முதியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுள்ளார். அதற்கான விடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சித்தி இத்னானியின் இந்த செயலை உங்கள் சிரிப்பை போல உங்க மனசும் ரொம்ப அழகு என பாராட்டி வருகிறார்கள்.
unknown node