ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வரும் திரைப்படம் “கேஜிஎஃப் 2”. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.
unknown nodeஇந்தத் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி,மலையாளம், ஆகிய மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்ப்பு கிடைத்து விட்டது என்றே கூறலாம்.
unknown nodeபடத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமும் பயங்கரமாக இருக்கிறது என பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகின்றனர். படமும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
unknown nodeஇதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையரஜா இருவரும் இணைந்து சென்னையில் உள்ள பிவிஆர் எஸ்கேப் திரையரங்கில் கேஜிஎப் 2 – திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node