படம் பார்த்த பிறகு இரண்டு நாள் அந்த பாதிப்பு இருக்கும் – கலைப்புலி தாணு..!!

Producer Kalaipuli Thanu has said in a recent interview about Karnan movie.

கர்ணன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கர்ணன் படம் குறித்து சமீபத்தில் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது ” படம் வெளியாகிறது இன்னும் சில நாட்களில் நான் என்ன சொல்ல..? ஆனால் படத்தை பார்த்த பிறகு அதனுடைய தாக்கம் கண்டிப்பாக இரண்டு நாட்கள் இருக்கும். கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கும். படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை செதுக்கி இருக்காரு” என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான அடுத்த பாடலும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.