தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 67
unknown nodeThalapathy 67
நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தற்காலிகமாக படத்திற்கு தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தளபதி 67 பிரபலங்கள்
தளபதி 67 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை நேற்று படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் நிறுவனம் வரிசையாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய்க்கு ஜோடியான த்ரிஷா
unknown nodeஇந்த நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் இணைந்தது குறித்து த்ரிஷா கூறியதாவது “எனக்குப் பிடித்த சிலர் மற்றும் அபாரமான திறமையான குழுவைக் கொண்ட இந்தச் சின்னச் சின்ன திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி. பரபரப்பான நேரங்கள் முன்னோக்கி ” என கூறியதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது .
unknown node