இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது“லியோ”திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்புக்காக படக்குழு விமானத்தில் காஷ்மீருக்கு சென்றனர்.
unknown nodethalapathy 67 [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற த்ரிஷா ஒரு சில தினங்களில் சென்னை திரும்பினார். எனவே இதனை, பார்த்த பலரும் த்ரிஷா லியோ படத்தில் இருந்து விலகி விட்டாரோ என்று கூறினார்கள். அவர் படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவியது.
unknown nodetrisha mother
இதனையடுத்து, த்ரிஷாவின் அம்மா உமா சமீபத்திய பேட்டி ஒன்றில் ” த்ரிஷா விஜய் படத்தில் இருந்து விலகிய தகவல் அனைத்தும் வெறும் வதந்தி தகவல். அவர் வேறொரு படத்திற்காக சென்னை வந்துள்ளார். எனவே சமூக வலைத்தளத்தில் பரவும் அணைத்தும் பொய்யானது என்று கூறியுள்ளார்.
unknown nodeThalapathy67Update [Image Source: Twitter ]
மேலும் லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.