நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருகிறார். இதற்கிடையில், அவர் புதிதாக போட்டுக்கொண்ட டாட்டூ புகைப்படம் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeTrisha [Image Source: Twitter ]
ஏற்கனவே. த்ரிஷா தனது நெஞ்சு பகுதி மற்றும் கைகளில் டாட்டூ போட்டிருந்தார். இது அனைவர்க்கும் தெரியும். ஆனால், தற்போது கேமராவை வைத்து அழகான டாட்டூ ஒன்றை தனது முத்துப்பகுதியில் போட்டுள்ளார்.
unknown nodeபொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்காக அவர் டெல்லி சென்றிருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அவர் போட்டிருந்த புதிய டாட்டூ தெரிய வந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சினிமா மீது உங்களுக்கு இருக்கும் காதல் இதன் மூலமே தெரிகிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeTrisha Krishnan [Image Source: Twitter ]
மேலும், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் சென்னை, கோயம்புத்தூர், டெல்லிஆகிய இடங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.