மரம் நட வேண்டும்,trend செய்ய வாருங்கள் ! தலைவர்/தளபதி/தல ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விவேக்

நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை

அப்துல் கலாமின் பிறந்த நாளை  முன்னிட்டு ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார்.நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார்.இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த வகையில் நாளை இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

unknown node