தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த ‘டாப் 5’ படங்கள்.! 1 இடத்தில எந்த படம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ பெரிய பட்ஜெட், மற்றும் சிறிய பட்ஜெட்  திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ பெரிய பட்ஜெட், மற்றும் சிறிய பட்ஜெட்  திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடும். சில படங்கள் வசூல் ரீதியாக மட்டுமே வெற்றிபெறும்.

இந்த நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகி உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்தது எந்த திரைப்படங்கள் என்ற டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

1.2.0

unknown node

2.0 movie [Image Source : Google ]

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் “2.0”. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 800 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2.பொன்னியின் செல்வன்

unknown node

Ponniyin Selvan Poster [Image Source: Google ]

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த திரைப்படம் மிக்பெரிய வெற்றியையோ பெற்று இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 530 கோடிகள் வசூல் செய்திருந்தது.

3.விக்ரம்

unknown node

Vikram100DaysCelebration [Image Source: Twitter ]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் “விக்ரம்” என்று கூறலாம். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 420 கோடி வரை வசூல் செய்திருந்தது.

4.பிகில்

unknown node

Bigil [Image Source : Google ]

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு  வெளியான  திரைப்படம் “பிகில்”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியை விட வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம். இந்த திரைப்படம்   உலகம் முழுவதும் 340 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

5.வாரிசு

unknown node

VarisuPongalWinner [Image Source : Twitter ]

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாக படம் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த டாப் 5 படங்களில் இரண்டு படங்கள் விஜய் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.