இன்று "வலிமை" படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

The update on the First Look poster is expected to be more likely to come out as the shooting of the Strength film comes to an end

வலிமை படத்தின் படபிடிப்பு நிறைவடைகிறது என்பதால் பர்ஸ்ட் லூக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் இன்று ஒரு வெளிநாட்டு சண்டை காட்சி தவிர்த்து வலிமை படத்தின் படபிடிப்பு நிறைவடைகிறது. இதனால் படப்பிடிப்பு முடிந்து விட்டு எனவும் படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் குறித்த அப்டேட் இன்று வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.