"நெஞ்சம் மறப்பதில்லை" படத்தை பாராட்டிய துப்பாக்கி பட இயக்குனர்..!

After watching the sneak peek video of the film, director AR Murugadoss praised it on his Twitter page.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை பார்த்து விட்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அணைத்து மக்களுக்கும் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். மேலும், தற்போது இந்த படத்திற்கான ஸ்னீக் பீக் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.

இந்த நிலையில் இந்த ஸ்னீக் பீக் வீடியோ வீடியோவை பார்த்து பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எஸ் ஜே சூர்யா நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. யுவன் செல்வராகவன் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node