வெறித்தனம்.. அடுத்த ஆண்டு தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்...!!

It is reported that two films starring Vijay will be released next year

அடுத்த வருடம் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த வருடம் பொங்கலிற்கு மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களு விருந்துகொடுத்தது போல் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜயின் 65 வது படம் வெளியாகிறது. அதைபோல் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று தளபதி 66 படத்தையும் வெளியிட விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.